ECONOMY

பராமரிப்பாளர் வீட்டில் 11 மாத குழந்தை இறந்தது

11 மே 2022, 6:59 AM
பராமரிப்பாளர் வீட்டில் 11 மாத குழந்தை இறந்தது

கோலாலம்பூர், மே 11: குழந்தை பராமரிப்பாளர் வீட்டில் 11 மாத ஆண் குழந்தை மயங்கிய நிலையில் நேற்று உயிரிழந்தது.

காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது ஜைத் ஹசன் கூறுகையில், குழந்தையை பாதிக்கப்பட்டவரின் தாயார் சிகிச்சைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

நேற்று பிரேத பரிசோதனையின் மேற்கொள்ளப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் இன்னும் காத்திருப்பதாக ஜைத் கூறினார்.

குழந்தை பராமரிப்பாளர் இடம் இருந்து வாக்குமூலத்தையும் போலீசார் பதிவு செய்தனர். இதுவரை குழந்தையின் இறப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (a) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சம்பவம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், 019-4565502 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திலோ தொடர்பு கொள்ளலாம் என்று முகமது ஜைத் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.