ALAM SEKITAR & CUACA

டீம் சிலாங்கூர் ஏற்பாட்டில் மரம் நடும் இயக்கம்- ஜூன் மாதம் தொடக்கும்

11 மே 2022, 2:53 AM
டீம் சிலாங்கூர் ஏற்பாட்டில் மரம் நடும் இயக்கம்- ஜூன் மாதம் தொடக்கும்

ஷா ஆலம், மே 11 -  சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக  டீம் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பு   மரம் நடும் இயக்கத்தை ஜூன் மாதம் பல மாவட்டங்களில் தொடங்க உள்ளது.

இத்திட்டத்தை  அமல்படுத்துவதற்காக டீம் சிலாங்கூர், வனத்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஒத்துழைப்பு நல்கி வருவதாக அந்த அமைப்பின் தலைமைச் செயலக அதிகாரி ஷியாஹைசெல் கெமான் கூறினார்.

நாங்கள் ஏற்கனவே பல மாவட்டங்களை அடையாளம் கண்டுள்ளோம். காட்டு மரங்களை நாங்கள் உலு சிலாங்கூர் மற்றும் கோம்பாக்கில் நடவிருக்கிறோம். அதே சமயம், சதுப்பு நில மரங்கள் கோல சிலாங்கூர் மற்றும் சிப்பாங்கைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் நடப்படும் என்று அவர் சொன்னார்.

2021 ஆம் ஆண்டு தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்குள் பத்து லட்சம் மரங்களை நடுவதை இலக்காகக் கொண்ட மாநில அரசின் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது  என்று அவர் சிலாங்கூர் கினியிடம் அவர் தெரிவித்தார்.

பல உயர்கல்வி நிலையங்களைச்  சேர்ந்த மாணவர்களும் இந்த மரம் நடும் இயக்கத்தில்  பங்கேற்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டீம் சிலாங்கூர் அமைப்பு பல்கலைக்கழகங்களுடன் அணுக்கமான உறவைக் கொண்டுள்ளது. ஆயினும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக அவர்களின் பங்கேற்பைக் குறைக்க வேண்டிய நிருபந்தம் ஏற்பட்டது என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.