ஷா ஆலம், மே 10: புக்கிட் காசிங் சட்டமன்றம் மற்றும் அதன் வாக்காளர்களின் நலனுக்காக இந்த மாதம் மொத்தம் ஒன்பது நடவடிக்கைகள் நடைபெறும்.
செக்சன் 17 இல் உள்ள பசார் செந்தோசாவில் நேற்று முன்தினம் அன்னையர் தின கொண்டாட்டத்துடன் இந்த நடவடிக்கை தொடங்கியது என்று அதன் சட்டமன்ற உறுப்பினர் ஆர் ராஜீவ் தெரிவித்தார்.
“மே மாதத்திற்கான தொகுதி நடவடிக்கை நாட்காட்டியை பகிர்ந்து கொண்ட அவர் ஏதேனும் கேள்விகள் இருந்தால் help@bukitgasing.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்,” என்று அவர் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கில் பகிரப்பட்ட செயல்பாடுகளின் அடிப்படையில், திட்டங்களில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் விற்பனை, ஸ்மார்ட்போன் வகுப்புகள் மற்றும் ஹரி ராயா பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு ஆகியவை அடங்கும்.


