ECONOMY

வாகனம் ஓட்டும்போது தொலை பேசியைப் பயன்படுத்துவது விபத்துக்கான முக்கிய காரணம்

10 மே 2022, 6:37 AM
வாகனம் ஓட்டும்போது தொலை பேசியைப் பயன்படுத்துவது விபத்துக்கான முக்கிய காரணம்

ஷா ஆலம், மே 10: ஏப்ரல் 29 முதல் மே 8 வரை ஒப் செலாமாட் 18-ஐ செயல்படுத்தும் போது பதிவு செய்யப்பட்ட விபத்துகளுக்கு அலட்சியம் மற்றும் வாகனம் ஓட்டும்போது கவனம் இல்லாதது ஆகியவை முக்கிய காரணங்களாகும்.

சிலாங்கூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவரின் கூற்றுப்படி, ஓட்டுநர்கள் ஹேண்ட்-ஃப்ரீ சாதனங்கள் இல்லாமல் தொலைபேசிகளை அடிக்கடி பயன்படுத்துவதைக் கண்டறிந்துள்ளதாக சினார் ஹரியான் தெரிவித்தது.

“சாலை விதிகளை எப்போதும் கடைப்பிடிப்பது பயனர்களின் பொறுப்பாகும். கவனக்குறைவாக இருந்து சாலை நெறிகளைப் புறக்கணித்து  விபத்துகளை ஏற்படுத்த வேண்டாம்" என்று சூப்ரிண்டெண்டன் அஸ்மான் ஷரியாட் கூறினார்.

ஒப் செலாமாட் 18 இன் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை 1,411 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 15,947 ஆக உள்ளது.

மொத்தத்தில், சிலாங்கூரில் அதிகபட்சமாக 3,343 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து ஜோகூர் 2,297 சம்பவங்கள், பேராக் 1,582 சம்பவங்கள், கோலாலம்பூர் 1,370 சம்பவங்கள் மற்றும் பினாங்கு 1,310 சம்பவங்கள் ஆகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.