ANTARABANGSA

கிட்டத்தட்ட 1.5 கோடி இறப்புகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கோவிட்-19 உடன் தொடர்புள்ளவை- உலக சுகாதார நிறுவனம்

6 மே 2022, 5:11 AM
கிட்டத்தட்ட 1.5 கோடி இறப்புகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கோவிட்-19 உடன் தொடர்புள்ளவை- உலக சுகாதார நிறுவனம்

ஜெனிவா, மே 6 - 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலகளவில் கிட்டத்தட்ட 1.5 கோடி இறப்புகள் கோவிட் -19 தொற்றுநோயின் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையதாக உலக சுகாதார அமைப்பு (WHO) நேற்று தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி, முழு கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை, அல்லது "அதிகப்படியான இறப்பு", ஜனவரி 1, 2020 மற்றும் டிசம்பர் 31, 2021 க்கு இடையில் தோராயமாக 1.49 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கையானது, முந்தைய ஆண்டுகளின் தரவுகளின் அடிப்படையில், நிகழ்ந்த இறப்புகளுக்கும் மற்றும் எதிர்பார்க்கப்படும் இறப்புகளின் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசம் கணக்கிடப்படுகிறது.

கோவிட் -19 ஆல் நேரடியாக ஏற்படும் இறப்புகளை தவிர, "மறைமுக இறப்புகள்" பிற சுகாதார நிலைமைகளுக்கு காரணமாகும், தொற்று நோயால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதால் மக்கள் தடுப்பு மற்றும் சிகிச்சையை அணுக முடியவில்லை, என்று சின்ஹுவா கூறியது.

அதிகப்படியான இறப்புகளில் பெரும்பாலானவை - 84 விழுக்காடு - தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் குவிந்துள்ளன, மேலும் 68 விழுக்காடு உலகளவில் பத்து நாடுகளில் மட்டுமே பதிவாகியுள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 1.49 கோடி அதிகப்படியான இறப்புகளில் 81 விழுக்காடு நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் அதிக வருமானம் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் ஒவ்வொன்றும் முறையே 15 மற்றும் 4 விழுக்காடு ஆகும்.

உலகளாவிய இறப்பு எண்ணிக்கை பெண்களை விட (43 விழுக்காடு) ஆண்களுக்கும் (57 விழுக்காடு) மற்றும் வயதானவர்களுக்கு அதிகமாக இருந்தது.

"இந்த தரவுகள் தொற்றுநோயின் தாக்கத்தை மட்டும் சுட்டிக் காட்டவில்லைமேலும் வலுவான சுகாதார தகவல் அமைப்புகள் உட்பட நெருக்கடிகளின் போது அத்தியாவசிய சுகாதார சேவைகளை நிலை நிறுத்த கூடிய  மிகவும்  நெகிழ்வான சுகாதார அமைப்புகள் அனைத்து நாடுகளும் முதலீடு  செய்ய  வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றன," என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தெட்ரோஸ் அடானோம்  கெப்ரேயஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.