ECONOMY

பெண்களின் வருமானத்தை அதிகரிக்க அவர்கள் யுபிபிஎஸ் பயிற்சிகளில்  (IPT) பங்கேற்குமாறு டத்தோ மந்திரி புசார் அறிவுறுத்தல்.

5 மே 2022, 12:53 PM
பெண்களின் வருமானத்தை அதிகரிக்க அவர்கள் யுபிபிஎஸ் பயிற்சிகளில்  (IPT) பங்கேற்குமாறு டத்தோ மந்திரி புசார் அறிவுறுத்தல்.

ஷா ஆலம், மே 5: தங்கள் வருமானத்தை அதிகரிக்க விரும்பும் பெண்களை துணை வருமானம் வழங்கும் பயிற்சிகளில் (IPT) பங்கேற்குமாறு டத்தோ மந்திரி புசார் அறிவுறுத்துகிறார்.

தங்கள் வருமானத்தை அதிகரிக்க விரும்பும் தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் குறைந்த வருமானமுடைய பெண்கள் சிலாங்கூர் கைத்தொழில்  பயிற்சி துறை அளிக்கும் (யுபிபிஎஸ்) திட்டத்தில்  பங்கு கொள்ள ஆலோசனை வழங்கினார்.

இங்குக் கிடைக்கும் பயிற்சிகளின் வழி மருத்துவச்சி, அழகு, மேலாண்மை மற்றும் முதியோருக்கான பராமரிப்பு ஆகிய துறைகளில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம் என்றார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷா பேஸ்புக் மூலம் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் சமூகப் பொருளாதார மேம்பாடு, சமூக நலன், தொழிலாளர் ஆற்றல் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் (Vandy Confinement Sdn Bhd) மகப்பேறு, (B Beaute Elegant Sdn Bhd) அழகு, (Senior Care Academy Sdn Bhd) முதியோர் பராமரித்தல் மற்றும் J&W Sdn Bhd அகாடமி ஆகியவற்றுடன் இணைந்து சமூகப் பொருளாதார மேம்பாடு பயிற்சி திட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக  அறிவித்தார்.

அனைத்துப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் RM24,000 மற்றும் 100 விழுக்காடு ஏற்பாட்டாளரால் நிதி அளிக்கப்படுகிறது, அதே சமயம் பதிவுக் கட்டணம் RM2,500 முதல் RM3,500 வரை படிப்பைப் பொறுத்து இருக்கும்.  சம்பந்தப்பட்டவர்கள் சான்றிதழ் பெறுவதற்கு முன் பங்கேற்பாளர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு கலவையான கற்பித்தலில் கலந்து கொள்ள வேண்டும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.