கோத்தா பாரு, ஏப் 29 - நோன்புப் பெருநாளை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் ஓப் செலாமாட் சாலை பாதுகாப்பு நடவடிக்கையானது சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பிற்கும் சீரான போக்குவரத்திற்கும் முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதே தவிர நிலுவையில் சம்மன்கள் அல்லது கைது ஆணை உள்ள நபர்களை தடுத்து வைப்பதை இலக்காகக் கொண்டிருக்கவில்லை என்று காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
ஒப் செலாமாட் இயக்கத்தின் போது குற்றப்பதிவு கொண்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. ஏனெனில் சாலையைப் பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பாக தங்கள் குடும்பத்தினருடன் வீடு திரும்புவதை காவல்துறை உறுதிசெய்ய விரும்புகிறது என்று புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் டத்தோ மாட் காசிம் கரீம் கூறினார்.
இம்முறை முறை ஓப் செலாமாட் நடவடிக்கையின் போது ஒரு நபரை தடுத்து வைப்பது அல்லது கைது செய்வது எங்களின் நோக்கமல்ல என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்.
ஒரு குற்றவாளியை காவலில் வைப்பதற்கு எங்களிடம் பல வழிகள் உள்ளன. ஆனால், அதற்கான நேரம் பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
நேற்று இங்கு நடைபெற்ற மாநில காவல்துறைத் தலைவர் பதவி ஒப்படைக்கும் நிகழ்வை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


