குவாந்தான், ஏப் 26 - கடந்த வாரம் 700 வெள்ளி போலி மலேசிய ரிங்கிட் தாள்களைப் பயன்படுத்தியதாக கோழி வியாபாரி ஒருவர் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி முகமது காஃப்லி சே அலி முன்னிலையில் தமக்கு எதிராக கொண்ட வரப்பட்ட குற்றச்சாட்டை புக்கிட் செடோங்கோல், தாமான் துனாஸ் மக்மூர் பகுதியைச் சேர்ந்த 58 வயதான ரோஹமட் நீதிபதி முகமட் கஃப்லி சே அலி மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி மதியம் 12.15 மணியளவில் இங்குள்ள இண்ட்ரா மக்கோத்தாவிலுள்ள உள்ள வங்கியில் ஒரு பெண்ணின் வங்கிக் கணக்கில் ஏழு 100 வெள்ளி மதிப்புள்ள கள்ள நோட்டுகளை உண்மையானவை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்டதும் வகையில் சேர்த்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் தண்டனைச் சட்டத்தின் 489பி பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
அந்த ஆடவரை 5,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும் அவர் வழக்கறிஞரை நியமிப்பதற்கும் ஏதுவாக வழக்கை வரும் மே 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


