ஷா ஆலம், ஏப் 25- இன்று மாலை தொடர்ந்து பெய்த அடைமழை காரணமாக கோலாலம்பூரின் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
இதன் காரணமாக தலைநகரில் உள்ள பல சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜாலான் சிகாம்புட், ஜாலான் கூச்சிங், ஜாலான் புடு, ஜாலான் அம்பாங் மற்றும் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்ட சாலைகளாகும் என்று கோஸ்மோ இணைய நாளேடு கூறியது.
வெள்ள நீர் உயர்வு கண்ட அதேவேளையில் ஆற்றிலும் நீர் மட்டம் உயர்ந்ததால் நிலைமை மேலும் மோசமடைந்ததாக கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் போக்குவரத்து மேலாண்மை மையம் கூறியது.
தீடீர் வெள்ளம் மற்றும் ஆற்று நீர் பெருக்கு காரணமாக ஜாலான் சிகாம்புட் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக அம்மையத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.


