ஷா ஆலம், ஏப் 25- கோவிட்-19 நோய்த் தொற்று காலத்தில் கடைபிடிக்கப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகளின் வழி டிங்கி காய்ச்சல் சம்பவங்களை எண்ணிக்கையைக் குறைக்க முடிந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தின் போது ஐந்து ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டதாக அவர் சொன்னார்.
பொது முடக்க காலத்தில் வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தது நல்ல பலனைத் தந்தது. வீட்டிலிருக்கும் போது சுற்றுப்புறங்களை அடிக்கடி சுத்தம் செய்த காரணத்தார் ஏடிஸ் கொசுக்களின் பரவலைத் தடுக்க முடிந்தது என்றார் அவர்.
இது பயன்படுத்துவதற்கு உகந்த நல்ல முன்னேற்றம் எனக் கூறிய அவர், அண்டை நாட்டிலும் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டது என்றார்.
கடந்தாண்டு முழுவதும் நாட்டில் 26,365 கோவிட்-19 சம்பவங்களும் 20 உயிரிழப்புகளும் பதிவானதாக டாக்டர் நோர் ஹிஷாம் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி கூறியிருந்தார்.


