ஷா ஆலம், ஏப்ரல் 25 – கோலாலம்பூர் சிராஸ் பகுதியில் தாமான் மூடாவில் உள்ள பம்ப் ஹவுஸில் குழாய் வெடித்ததில், பாதிக்கப்பட்ட குழாய் பழுது நீக்கும் செய்யும் பணிகள் இன்று அதிகாலை 2 மணியளவில் நிறைவடைந்தன.
இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், சிலாங்கூர் நீர் மேலாண்மை எஸ்டிஎன் பிஎச்டி (ஆயர் சிலாங்கூர்) கார்ப்பரேட் கம்யூனிகேஷன் தலைவர் எலினா பசேரி, நுகர்வோர் வளாகங்களுக்கு படிப்படியாக நீர் விநியோகம் செய்யப்பட்டு, இன்று மாலை 4 மணிக்கு முழுமையாக கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
நுகர்வோர் வளாகத்தின் இருப்பிடம் மற்றும் தூரத்தைப் பொறுத்து நீர் வழங்கல் மீட்பு காலம் ஒரு பகுதிக்கு மற்றொரு பகுதிக்கு வேறு படுகிறது என்றார்.
"பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் டேங்கர்கள் மூலம் மாற்று உதவி வழங்கப்படும், திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடையின் போது முக்கியமான இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
“தண்ணீர் டேங்கர்களில் இருந்து நீர் விநியோகத்தை சேகரிக்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் முகக்கவரியை அணியவும் ஆயர் சிலாங்கூர் நுகர்வோரின் ஒத்துழைப்பை நாடுகிறது,” என்று அவர் கூறினார்.
நீர் விநியோகத்தை பெற்ற நுகர்வோர் பயன்பாட்டிற்கு முன் வீட்டு குழாய்களில் வரும் அழுக்கு நீரை முற்றாக வெளியேற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆயர் சிலாங்கூர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரான மீட்பு செயல்முறை உறுதி செய்வதற்காக தண்ணீரை கவனமாகப் பயன்படுத்துவதை நினைவூட்டியது.
மேலும் புதுப்பிப்புகளுக்கு, www.airselangor.com என்ற இணையதளம், ஆயர் சிலாங்கூர் செயலி, பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்தாகிராம் உள்ளிட்ட ஆயர் சிலாங்கூர் இன் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு சேனல்களைப் பார்வையிடவும் அல்லது 15300 என்ற எண்ணில் ஆயர் சிலாங்கூர் இன் தொடர்பு மையத்தைத் தொடர்பு கொள்ளவும்


