ECONOMY

அமிருடின் தலைமையில் கெஅடிலான் கோம்பாக் தொகுதி வலுவுடன் உள்ளது

23 ஏப்ரல் 2022, 3:27 PM
அமிருடின் தலைமையில் கெஅடிலான் கோம்பாக் தொகுதி வலுவுடன் உள்ளது

ஷா ஆலம், ஏப் 23- முன்னாள் தலைவர்கள் செய்த துரோகத்தால் கோம்பாக் பி.கே.ஆர். தொகுதிக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதனை வெற்றிகரமாக கட்டிக் காத்து வருகிறார்.

அமிருடினின் அர்ப்பணிப்பு காரணமாக கோம்பாக் தொகுதி சிறப்பான நிலையில் செயல்படுவதாக கோம்பாக் கெஅடிலான் இளைஞர் பிரிவுத் தலைவர்  பதவிக்கான வேட்பாளர் முகமது ஹூசைனி முகமது யூனுஸ் கூறினார்.

அமிருடினின் கடும் உழைப்பை கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் அங்கீகரித்தது மட்டுமின்றி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் அவரை பல முறை பாராட்டியுள்ளார் என அறிக்கையொன்றில் அவர் தெரிவித்தார்.

கோம்பாக் கெஅடிலான் தொகுதி குறித்து ஃபார்ஷா வாஃபா சல்வடோர் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து கருத்துரைத்த முகமது ஹூசைனி, கோம்பாக் தொகுதி உறுப்பினர்கள் உள்பட அனைத்து கெஅடிலான் உறுப்பினர்களும் ஏற்கனவே புதிய அத்தியாயத்தை தொடக்கி விட்டனர் என்று சொன்னார்.

கோம்பாக் தொகுதியை மட்டுமின்றி சிலாங்கூர் மாநிலத்தையும் தொடர்ந்து வழி நடத்த அமிருடினுக்கு கட்சி உறுப்பினர்கள் ஆதரவளித்து விட்டதால் டத்தோஸ்ரீ அன்வாரின் முன்னாள் உதவியாளரான ஃபார்ஷா இவ்விவகாரத்தில் தன்னை ஒரு போராட்டவாதியாக காட்டிக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

சிலாங்கூர் மந்திரி புசாருமான டத்தோஸ்ரீ அமிருடினுக்கு அடிமட்ட ஆதரவு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கோம்பாக் தொகுதி கெஅடிலான் தலைவர் பதவிக்கு அவரை எதிர்த்து தாம் போட்டியிடுவதாக ஃபார்ஷா கூறியிருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.