ACTIVITIES AND ADS

அம்பாங் எம்பிஏஜே ஏப்ரல் 30 வரை இலவசக் குப்பை அகற்றும் சேவையை வழங்குகிறது

20 ஏப்ரல் 2022, 5:48 AM
அம்பாங் எம்பிஏஜே ஏப்ரல் 30 வரை இலவசக் குப்பை அகற்றும் சேவையை வழங்குகிறது

ஷா ஆலம், ஏப்ரல் 20: அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) ஹரி ராயா பெருநாளுக்காக வீடுகளில் அப்புறப் படுத்தப்படும் தட்டுமுட்டுக் குப்பைகளை அகற்றும் சேவையை இலவசமாக வழங்குகிறது.

வீடுகளில் பயன்படுத்தப்பட்ட மேசை-நாற்காலிகள் , மெத்தை - கட்டில் அலமாரிகள் உட்படக் கழிவுகளைச் சாலை ஓரங்களிலும், ஒதுக்கு புறங்களிலும் கைவிடும் போக்கை மக்கள் கைவிட வேண்டும். அதற்காக இலவசமாக அப்பொருட்களை எடுத்துச்செல்லும் சேவையைக் கேடிஇபி கழிவு மேலாண்மையை வாரியம் மற்றும் எம்பிஏஜே இன்று தொடங்கி ஏப்ரல் 30 வரை வழங்குவதாக இன்று பேஸ்புக் மூலம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எம்பிஏஜே விண்ணப்பதாரரின் வீட்டிற்கு நேரடியாகத் தளபாடங்கள் மற்றும் மின் சாதனங்கள் போன்ற கழிவுகளைச் சேகரிப்பது குறித்துத் தெரிவித்தது.

பொதுமக்கள் கேடிஇபி கழிவு மேலாண்மையை (KDEBWM) 03-42854144 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுச் சுத்திகரிப்பு துறை, எம்பிஏஜே 03-42857044 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதற்கிடையில், கேடிஇபி கழிவு மேலாண்மையைத் தொடர்பு கொண்டபோது, ​​தூய்மைப்படுத்தும் செயல்பாடு அதன் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், சேவை தேவைப்படும் நபர்கள் அதைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

குறித்த காலத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மொத்தமாகக் குப்பை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றார்.

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.