ECONOMY

பேரங்காடியில் கனடிய ஆடவர் அடாவடி- போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்தனர்

19 ஏப்ரல் 2022, 11:05 AM
பேரங்காடியில் கனடிய ஆடவர் அடாவடி- போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்தனர்

கோலாலம்பூர், ஏப் 19- முகக் கவசம் அணியாததற்காக கண்டித்த பாதுகாவலரை கனடிய ஆடவர் ஒருவர் திட்டியதோடு ஆபாச சைகையும் காட்டிய சம்பவம் தொடர்பில் போலீசார்  விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்.

ஜாலான் அம்பாங்கிலுள்ள பேரங்காடி ஒன்றில் நிகழ்ந்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து 44 வயதுடைய அந்த ஆடவர் நேற்றிரவு 8.30 மணியளவில் காவல் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியதாக வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்டன் அஸ்ஹாரி அபு சாமா கூறினார்.

இந்நாட்டில் தங்கி பணி புரிந்து வரும் அவ்வாடவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 369 வது பிரிவு, 1955 ஆம் ஆண்டு சிறு குற்றங்கள் சட்டத்தின் 14 வது பிரிவு மற்றும் 2021 ஆம் ஆண்டு தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 18 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணை முடிந்து மேல் நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கை துணை பப்ளிக் புரோசிகியூட்டரிடம் ஒப்படைக்கப்படும் வரை அந்த ஆடவர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த கனடிய ஆடவர் பேரங்காடியில் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலரிடம் மூர்க்கத்தனமான நடந்து கொள்வதை சித்தரிக்கும் இரு காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வந்தன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.