ECONOMY

கிட்டத்தட்ட RM40,000 மதிப்புள்ள 57,518 காகித பார்க்கிங் கூப்பன்கள் இ-கூப்பன்களாக மாற்றப்பட்டது

19 ஏப்ரல் 2022, 3:15 AM
கிட்டத்தட்ட RM40,000 மதிப்புள்ள 57,518 காகித பார்க்கிங் கூப்பன்கள் இ-கூப்பன்களாக மாற்றப்பட்டது

ஷா ஆலம், ஏப்ரல் 19: கிட்டத்தட்ட RM40,000 பரிவர்த்தனைகளை உள்ளடக்கிய மொத்தம் 57,518 காகித பார்க்கிங் கூப்பன்கள் -கூப்பன்களாக மாற்றப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் (எஸ்எஸ்பி) பயன்பாட்டின் மூலம் டிஜிட்டல் பார்க்கிங் கட்டணச் சிக்கல்களை எதிர்கொள்ளும் பயனர்கள் முறையான முகவரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று ஊராட்சி மன்றங்கள், பொது போக்குவரத்து, புதுக் கிராம மேம்பாடு அரசாங்க ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

"-கூப்பன்களை வாங்க முகவர்கள் உதவுவார்கள். பணம் செலுத்திய பிறகு, அவர்கள் பயனரின் வாகன எண்ணை உள்ளிடுவார்கள். எனவே இந்த நடவடிக்கை நுகர்வோருக்கு எளிதாக்குகிறது, ”என்று அவர் இன்று சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

ஏப்ரல் 1 முதல், சிலாங்கூரில் உள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களும் கார் பார்க்கிங் கட்டணங்கள் முழுவதுமாக -கூப்பன் முறையைப் பயன்படுத்துகின்றன.

எனவே, பணம் செலுத்தும் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கு கூகுள் பிளேஸ்டோர், ஏப்ஸ்டோர் அல்லது ஹூவாய் ஸ்டோர் ஆகிய தளங்கள் வாயிலாக எஸ்எஸ்பி செயலியைப் பதிவிறக்கம் செய்ய பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

காகித கூப்பன்களை வைத்திருப்பவர்கள், மார்ச் 26 முதல் கூப்பனின் மீதமுள்ள மதிப்பை கிரெடிட்டிற்கு மாற்ற, எஸ்எஸ்பி பயனர்களாகப் பதிவு செய்ய வேண்டும்

இந்த முறையை அமல்படுத்தியதைத் தொடர்ந்து இழப்புகளை எதிர்கொண்ட நுகர்வோரின் கவலைகளை கருத்தில் கொண்டு இந்த முயற்சி முடிவு செய்யப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.