கோத்தா பாரு, ஏப் 17 - இன்று முதல் பள்ளிகள் சுழல் முறையில் இல்லாமல் வழக்கம் போல் செயல்படும் என்று கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் ராட்ஸி மாட் ஜிடின் தெரிவித்தார்.வருகைப்பதிவும் பள்ளியின் செயல்பாடுகளும் கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலுக்கு முந்தைய காலத்தைப் போல் இருக்கும் என்று அவர் சொன்னார்.
பள்ளி மீண்டும் திறக்கும் போது, மாணவர்கள் பள்ளிக்கு எப்படி வருகிறார்கள் என்பதைப் பார்க்க முடியும். மேலும் வெளியில் உள்ள சூழ்நிலையையும் அறிய இயலும். வெளியில் திறந்த சூழல் உள்ளதால் சிலர் சீரான செயலாக்க நடைமுறையை பின்பற்றாமல் போகலாம்.
எனவே, பள்ளிகள் தொடர்ந்து திறந்திருப்பதையும், இனி எந்த மூடுதல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாநிலக் கல்வித் துறை, மாவட்டக் கல்வித் துறை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
எதிர்காலத்தில் பள்ளிக் கல்வி தொடர்பான 4.0 கட்ட வழிகாட்டுதல்கள் தனது அமைச்சு வெளியிடும் என்றும் முகமட் ராட்ஸி தெரிவித்தார்.
அதிக சுதந்திரம் உள்ள தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப அந்த வழிகாட்டுதல்கள் இருப்பதாகக் கூறிய அவர், அனைத்து விதிமுறைகளும் கடைபிடிக்கப்படுவதை அது உறுதிப்படுத்துவதாகவும் கூறினார்.
MEDIA STATEMENT
இன்று முதல் சுழல் முறை கல்வி இல்லை- வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்
17 ஏப்ரல் 2022, 3:54 AM


