ஷா ஆலம், ஏப்ரல் 16: கிள்ளான் செமெந்தாவைச் சுற்றியுள்ள குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு (பி40) ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு மொத்தம் 750 ஜோம் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் ஒதுக்கப்பட்டன.
மாநிலச் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் முகமட் சாடோன் முவா, இதுவரை 400 பெறுநர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு RM100 தொகைக்கான பற்றுச் சீட்டுகள் அடுத்த வாரம் முதல் விநியோகிக்கப்படும் என்றும் கூறினார்.
“பலர் விண்ணப்பித்தனர் ஆனால் அவர்கள் மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டங்களில் (எஸ்.எம்.யு.இ.) மற்றும் சிலாங்கூர் மாநிலப் பரிவுமிக்க அன்னையர் உதவித் திட்டம் (கிஸ்) ஆகியவற்றில் உதவி பெறுபவர்கள் என்பதால் நிராகரிக்கப் பட்டது.
"இப்போது விண்ணப்பம் இன்னும் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹரி ராயா பெருநாள் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், கிராமத் தலைவர் அல்லது வசிக்கும் பகுதிகளின் குடியிருப்புப்பகுதி பிரதிநிதி கவுன்சிலைச் சந்திக்கலாம், ”என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
வருமானம் குறைந்த 33,400 பி40 குடும்பத் தலைவர்கள் பயனடைந்த ஹரி ராயா பெருநாள் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளை விநியோகிப்பதற்காகச் சிலாங்கூர் அரசாங்கம் இந்த ஆண்டு RM33.4 லட்சத்தை ஒதுக்கியுள்ளது.
மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான நீண்ட கால முயற்சியாக ஏழைகளை இலக்காகக் கொண்டு ஜோம் ஷாப்பிங் ராயா மாநில அரசால் அறிமுகப் படுத்தப்பட்டது.
இதற்கிடையில், மசூதி மற்றும் சூராவ்களின் செயல்களை மேம்படுத்த உதவியாகக் கடந்த வாரம் செமெந்தா பகுதியில் உள்ள 12 மசூதிகளுக்கு மொத்தம் RM12,000 விநியோகிக்கப்பட்டது என்று முகமட் சாடோன் கூறினார்.
இந்த திங்கட்கிழமை முதல் ரமலான் முடியும் வரை சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு லம்புக் கஞ்சி விநியோகம் செய்வோம் என்றார்


