கோலாலம்பூர், ஏப்ரல் 16– தனியார் நிறுவனமொன்றின் பெண் குமாஸ்தா ஒருவர், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துச் சமூக வலைதளங்களில் ‘டாக்டருடன்’ நட்பாகப் பழகியதால் ரிம152,200 இழந்துள்ளார்.
கோலாலம்பூர் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிசிஐடி) தலைவர் அசிஸ்ட் கம்யூம் முகமட் மகிடிஷாம் இஷாக் கூறுகையில், 34 வயதுடைய சந்தேக நபர், கடனையும் திருமணச் செலவுகளையும் அடைக்கப் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நிதி உதவி கோரினார்.
நகரின் மையத்தில் உள்ள ஹோட்டல் அறையில் சந்தேக நபரைப் பெண் பலமுறை சந்தித்ததாகவும், அந்த நபருக்கு வீட்டு வைப்புத் தொகையைச் செலுத்த உதவுவதற்காக RM30,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் RM122,500 ரொக்கத்தை ஒப்படைத்ததாகவும் அவர் கூறினார்.
“சந்தேக நபர் ஒரே ஹோட்டலில் பல பெண்களிடம் இதே காரியத்தைச் செய்திருப்பதைப் பாதிக்கப்பட்ட பெண் கண்டுபிடித்தார். பாதிக்கப்பட்ட பெண் ஏப்ரல் 9 ஆம் தேதி போலீசில் புகார் செய்தார், ”என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
அதைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவுவதற்காகக் கிள்ளான் பள்ளத்தாக்கில் வேலையில்லாத உள்ளூர் ஆள் (39) ஒருவரைப் போலீஸார் கடந்த புதன்கிழமை கைது செய்தனர்.
"மூன்று கைத்தொலைபேசிகள், ஒன்பது தங்கக் கட்டிகள், 30,000 ரிங்கிட் மதிப்புள்ள எட்டுத் தங்க டினார்கள் மற்றும் RM18,000 ரொக்கம் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்," என்று அவர் கூறினார், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ்ச் சந்தேக நபர் நாளை வரை விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


