ECONOMY

ஒரு விபத்தில் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட மியான்மர் நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்

15 ஏப்ரல் 2022, 9:38 AM
ஒரு விபத்தில் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட மியான்மர் நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்

ஷா ஆலம், ஏப்ரல் 15: கிள்ளான் பகுதியில் நடந்த சாலை விபத்தில் வேண்டுமென்றே காயம் அடைந்ததாகக் கருதப்படும் மியான்மர் நபரை போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர்.

வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி எஸ். விஜய ராவ்,  இது குறித்து கூறும்பொழுது ‘’கடந்த வியாழன் ஏப்ரல் 7 அன்று சாலையில் காரை ஓட்டிச் சென்ற போது, ​​ அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென தனது காரை நோக்கி ஓடிவந்து, கண்ணாடியை நோக்கி பாய்ந்ததாகவும் ஒரு உள்ளூர் நபரிடம் இருந்து காவல் துறை புகாரைப் பெற்றதாகக் கூறினார்.’’

"விபத்திற்குப் பிறகு, தனது காரை மோதிய பாதசாரி தொடர்ந்து விபத்து நடந்த இடத்திலிருந்து விலகிச் சென்றதாகவும், சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும்" தனது வாகனத்தில் டேச்போர்டு கேமரா காட்சிகள் இருப்பதாகவும், அவர் இன்று ஒரு புகாரில் தெரிவித்தார்.

தகவலின் பேரில், “இன்று காலை கிள்ளான், ஜாலான் ஷாப்பாடு ரந்தௌ பாஞ்ஜாங்கில் 25 வயது இளைஞனைக் கைது செய்தப்பின் இப்போது மேலதிக விசாரணைக்காக காவலில் வைக்கப் பட்டிருப்பதாகவும்’’ விஜய ராவ் கூறினார்.

"இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 336 இன் கீழ் வகைப்படுத்தப் பட்டுள்ளது, இது மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு செயலாகும்," என்று அவர் கூறினார்.

இந்த விபத்து சமூக வலைதளமான பேஸ்புக்கில் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்ட 45 வினாடிகள் கொண்ட வீடியோ மூலமாகவும் பரவியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.