ALAM SEKITAR & CUACA

ஒரு சில இடங்களில் மட்டுமே சிறுவர்கள் ரமலான் பஜாருக்குச் செல்கிறார்கள்

14 ஏப்ரல் 2022, 5:38 AM
ஒரு சில இடங்களில் மட்டுமே சிறுவர்கள் ரமலான் பஜாருக்குச் செல்கிறார்கள்

சுபாங் ஜெயா, ஏப்ரல் 14: மாநிலத்தில் உள்ள ரமலான் பஜாருக்கு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அழைத்து வரும் பெற்றோர்கள் எண்ணிக்கை குறைந்த அளவில் உள்ளது. நோன்பின் முதல் வாரம் வரை ஒரு சில இடங்களில் மட்டுமே சிறுவர்கள் வருவது கண்டறியப்பட்டுள்ளது.

ஊராட்சி மன்றங்களின்  (PBT) அமலாக்கத்தின் கண்காணிப்பின் அடிப்படையில், பஜாருக்கு வந்தவர்களில் பெரும்பாலோர் பெரியவர்கள் என்று ஊராட்சி மன்றங்கள், பொது போக்குவரத்து, புதுக் கிராம மேம்பாடு  ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

"12 வயதிற்குட்பட்ட சிறுவர்களை ரமலான் பஜாருக்கு கொண்டு வரப்பட்ட பிரச்சினை சில இடங்களில் மட்டுமே இருப்பதாக நான் உணர்கிறேன், எல்லா பஜார்களிலும் இல்லை," என்று அவர் நேற்று இங்கு அருகில் உள்ள பஜார் வியாபாரிகளுடன் நோன்பு துறந்த பின்னர் ஊடகங்களைச் சந்தித்தபோது கூறினார்.

எவ்வாறாயினும், ரமலான் பஜார் நடவடிக்கை அதன் இரண்டாவது வாரத்தில் நுழைந்தாலும், இந்த பிரச்சினை மாநில அரசாங்க கவுன்சில் கூட்டத்தில் (எம்எம்கேஎன்) விவாதிக்கப்படும் என்று ஸீ ஹான் கூறுகிறார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.