ALAM SEKITAR & CUACA

சோதனைகளில்  தோல்விக் கண்ட இரண்டு கோவிட்-19 சுய பரிசோதனைக் கருவிகளின் அனுமதி ரத்து.

12 ஏப்ரல் 2022, 3:34 AM
சோதனைகளில்  தோல்விக் கண்ட இரண்டு கோவிட்-19 சுய பரிசோதனைக் கருவிகளின் அனுமதி ரத்து.

கோலாலம்பூர், ஏப்ரல் 11: Innovac Technology Sdn Bhd மற்றும் Conan Medical Technology Berhad ஆகியவைகளின்  கோவிட்-19 சுய-பரிசோதனை கருவிக்கான நிபந்தனையுடன் கூடிய  அனுமதியை மருத்துவ சாதனங்கள் ஆணையம் (எம்டிஏ) ரத்து செய்துள்ளது.

இன்று அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் எம்டிஏ பதிவேற்றம் செய்த ஒரு விளக்கப்படம் மற்றும் சுருக்கமான அறிக்கை மூலம் இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது.

“எம்டிஏ வழங்கிய நிபந்தனையுடனான ஒப்புதலுக்கு நிறுவனம் இணங்கத் தவறியதால் இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது மற்றும் உடனடியாக அமலுக்கு வருகிறது.

"பயன்படுத்துவதற்கு பாதுகாப்பற்றதாக இருக்கும் என்ற அச்சத்தில் எம்டிஏ தேவைகளுக்கு இணங்காத கோவிட்-19 சுய-பரிசோதனை கருவிகளை வாங்கவோ அல்லது பயன்படுத்தவோ வேண்டாம் என்று நுகர்வோருக்கு எம்டிஏ அறிவுறுத்துகிறது" என்று குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.