ECONOMY

நேற்று 11,994 புதிய கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன

8 ஏப்ரல் 2022, 1:19 PM
நேற்று 11,994 புதிய கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன

கோலாலம்பூர், ஏப்ரல் 8: புதிய கோவிட் -19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஆறு நாட்களாக 15,000 க்கும் குறைவாகவே இருந்தது, நேற்று 11,994 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இது மொத்த கோவிட் -19 சம்பவங்களின் எண்ணிக்கையை 4,292,585 ஆகக் கொண்டுவருகிறது, அதே நேரத்தில் நேற்று பதிவுசெய்யப்பட்ட 16,603 பேர் கோவிட் -19 வுடன்  சேர்த்து  மொத்த குணப்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை இப்போது 4,099,786 ஆக உள்ளது.

"நேற்று பதிவு செய்யப்பட்ட 541 புதிய சம்பவங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 217 பேர் அல்லது 40.1 விழுக்காடு மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டங்களாகும், அதே நேரத்தில் 324 சம்பவங்கள் அல்லது 59.9 விழுக்காடு ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டங்களாகும்" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்க்கான சிறப்பு சுகாதார வசதிகளைப் பயன்படுத்துவது குறித்து, டாக்டர் நோர் ஹிஷாம் கூறுகையில், நேற்றைய நிலவரப்படி தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) படுக்கைகளைப் பயன்படுத்துவதற்கு சிலாங்கூர் மட்டுமே 50 விழுக்காட்டுக்கும் அதிகமான பதிவு செய்துள்ளது.

கோவிட்-19 ஆபத்து குறைவான தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையத்தில் (PKRC) 50 விழுக்காட்டுக்கு மேல் பதிவு செய்யவில்லை.

சுவாசக் கருவி தேவைப்படும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 108 ஆகக் குறைந்துள்ளது, வென்டிலேட்டர் பயன்பாட்டில் 12 விழுக்காடு என்று டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.