ஷா ஆலம், மார்ச் 30- சிலாங்கூர் அரசின் மக்கள் பரிவு விற்பனைத் திட்டம் இவ்வாரம் சனிக்கிழமை இரு இடங்களில் நடைபெறும் என்று சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் கூறியது.
ஷா ஆலம், செக்சன் 7, புளோக் 7 அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் ஜாலான் செக்கோலா, பத்து 9, சிஜங்காங் ஆகிய இடங்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இந்த விற்பனை நடைபெறும் என்று அக்கழகம் தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.
கோழி, இறைச்சி, மீன், முட்டை பாக்கெட் சமையல் எண்ணெய் எங்களிடம் வாங்க திரண்டு வாருங்கள் என அந்த முகநூல் பதிவில் குறிப்பிடப்படுள்ளது.
பொருள் விலையேற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு 64 இடங்களில் வார இறுதி நாட்களில் இந்த மலிவு விலை விற்பனைத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.


