லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 30 - கர்ப்ப காலத்தில் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவது பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்களை அதிகரிக்காது என்பது புதிதாக வெளியிடப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தனித்துவமான மக்களுக்கு குறிப்பாக, கர்ப்பிணிகளுக்கு எம்.ஆர்.என்.ஏ. எனப்படும் அந்த தடுப்பூசி கூடுதல் பாதுகாப்பை வழங்குவது தொடர்பான உத்தரவாதத்தை அந்த ஆய்வு வழங்குகிறது என்று ஒட்டாவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் திங்களன்று ஒரு வெளியீட்டில் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின் வெளியீட்டாளரான தேஷெய்ன் பெல், ஒன்டாரியோ மாகாணத்தின் கோவிட்-19 நோய்த்தடுப்பு தரவுதளத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒன்டாரியோவின் மாகாண பிறப்புப் பதிவேட்டில் உள்ள 100,000 கர்ப்பிணிகளின் தரவை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இந்த முடிவை வெளியிட்டுள்ளார்.
கர்ப்ப காலத்தில் சுமார் 23 விழுக்காட்டு கர்ப்பிணிகள் குறைந்தது ஒரு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் புதிதாகப் பிறந்த குழந்தைகளை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்ப்பதற்கான தேவை அதிகரிக்கவில்லை எனக் கண்டறியப்பட்டது.
மேலும், தடுப்பூசி போடப்படாத தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, தடுப்பூசி போடப்பட்ட தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு தாக்கம் அதிகம் இல்லை ஷின்வா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
கர்ப்ப காலத்தில் கோவிட்-19 தடுப்பூசி போடுவது மோசமான கர்ப்பம் அல்லது பிரசவ விளைவுகளுடன் தொடர்புடையது அல்ல என்பதைக் காட்டும் ஆதாரங்கள் உலகெங்கிலும் அதிகரித்து வருகின்றன. மேலும் கோவிட் -19 தடுப்பூசிகள் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கும் கோவிட் -19 நோய்த் தொற்றை தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது.


