கோலாலம்பூர், மார்ச் 24 - பதிநான்காவது நாடாளுமன்றத்தின் நான்காம் தவணைக்கான இரண்டாவது கூட்டத் தொடரின் போது நிறைவேற்றப்பட்ட நான்கு சட்டங்களுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் அல் -சுல்தான் அப்துல்லா ரியாதுடீன் அல் முஸ்தபா பில்லா ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.
அவை காப்புரிமை (திருத்தம்) சட்டம் 2021, தொழிற்சாலைகள் மற்றும் இயந்திரங்கள் (ரத்து) சட்டம் 2022, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார (திருத்தம்) சட்டம் 2022 மற்றும் 2022 ஆம் ஆண்டு புவியியல் குறியீடுகள் சட்டம் என்று மக்களை துணை சபாநாயகர் டத்தோ முகமது ரஷிட் ஹஸ்னோன் கூறினார்.
இன்று மக்களவை அமர்வின் தொடக்கத்தில் முகமது ரஷிட் அவையில் இதனைத் தெரிவித்தார்.


