ANTARABANGSA

நவீன முறையில் ரூமா சிலாங்கூர்கூ 1,000 யூனிட்களை உருவாக்க பிகேஎன்எஸ் இலக்கு

20 மார்ச் 2022, 8:40 AM
நவீன முறையில் ரூமா சிலாங்கூர்கூ 1,000 யூனிட்களை உருவாக்க பிகேஎன்எஸ் இலக்கு

ஷா ஆலம், மார்ச் 20: சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தில் ரூமா சிலாங்கூர்கூ (ஆர்எஸ்கேயு) 1,000 யூனிட்களைக் கட்ட இலக்கு வைத்துள்ளது.

தொழில்துறை கட்டிட அமைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மேம்பாட்டாளர்கள் உடனான ஒத்துழைப்பு மூலம் அதன் இலக்கை அடையவுள்ளதாக  அதன் தலைமை நிர்வாக அதிகாரி சினார் ஹரியானிடம் அறிவித்தார்.

டத்தோ மாமூட் அப்பாஸின் கூற்றுப்படி, கட்டுமானத் தளங்கள் நிறுவப்படுவதற்கு முன்பு தொழிற்சாலைகளில் கட்டப்பட்ட வீட்டுக் கூறுகளைக் கொண்ட முறையைப் பயன்படுத்தும் திட்டங்களில் சைபர்ஜெயாவில் உள்ள 882 ஆர்எஸ்கேயுவில் அடங்கும்.

அவை தொழிற்சாலையில் தயாரிப்பிற்கு பின், கட்டுமான தளத்திற்கு அனுப்பப் படும், முன்பே தயார் நிலையில் இருக்கும் இடத்தில் நிறுவப்படுகிறது," என்று நேற்று பத்து மலையில் பாயு அடுக்குமாடி குடியிருப்பாளர் இல்லங்கள் திறப்பு விழாவின் போது அவர் கூறினார்.

பத்து மலைகளில் கான்கிரீட் மோல்ட் அமைப்பின் கலவையுடன் முடிக்க அதே தொழில்நுட்பம் ஸ்ரீ தெமெங்குங்கில் உள்ள 420 ஆர்எஸ்கேயு யூனிட்களில் பயன்படுத்தப்பட்டது என்று மாமூட் மேலும் கூறினார்.

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.