ECONOMY

ரவாங் பள்ளிக்கு அருகில், பாதசாரிகள் பாலத்தின் கூரையைச் சரிசெய்ய மக்கள் பிரதிநிதிகள் RM30,00

18 மார்ச் 2022, 9:33 AM
ரவாங் பள்ளிக்கு அருகில், பாதசாரிகள் பாலத்தின் கூரையைச் சரிசெய்ய மக்கள் பிரதிநிதிகள் RM30,00

ஷா ஆலம், மார்ச் 18: ரவாங் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் செலாயாங் எம்.பி ஆகிய இருவரும் ரவாங்கில் உள்ள தாமான் பெர்சத்துவில் 2 ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்த பாதசாரிகள் பாலத்தின் சேதமடைந்த மேற்கூரையைச் சரிசெய்ய RM30,000 ஒதுக்கீடு செய்துள்ளனர்.

ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறுகையில் ஒவ்வொரு நாளும் அதைப் பயன்படுத்தும் மக்களின் பாதுகாப்பிற்காகத் தங்கள் சொந்த ஒதுக்கீட்டை வெளியிட முயற்சி எடுத்ததாகக் கூறினார்.

அவர் கூறுகையில், கம்போங் சுங்கை தெரெந்தாங்கில் உள்ள சான் யுக் தேசிய வகை சீனப் பள்ளிக்கு முன்பாக அமைந்துள்ள பாலம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் முக்கிய நடை பாதையாக இருப்பதால் சேதமடைந்த கூரை ஆபத்தானது.

“சேதமடைந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாகிறது, ஆனால் இப்போது வரை பழுதுபார்க்கும் பணிக்காகப் பொதுப்பணித் துறை (ஜேகேஆர்) ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் தரவில்லை.

"அதனைப் பயன்படுத்தும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் ஜீ கீன் மற்றும் தானும் பாலத்திற்குப் புதிய கூரையை மாற்ற எங்கள் ஒதுக்கீட்டைப் பயன்படுத்த ஒப்புக்கொண்டோம்," என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

ஜே.கே.ஆர் கோம்பாக் மூலம் பழுதுபார்க்கும் பணிகள் இந்த ஏப்ரலில் தொடங்கி உடனடியாக முடிக்கப்படும் என்று ரவாங் சட்டமன்ற உறுப்பினரான வேய் கியாட் கூறினார்.

"மக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உள்ளடக்கிய உள்கட்டமைப்பு பழுதுபார்ப்புக்கான சிக்கலான செயல்முறையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று தாங்கள் கேட்டுக்கொள்வதாக," அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.