ECONOMY

அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டி- பியர்லி-தியானா ஜோடி காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வு

18 மார்ச் 2022, 4:50 AM
அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டி- பியர்லி-தியானா ஜோடி காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வு

கோலாலம்பூர், மே 18- 2022 ஆம் ஆண்டிற்கான அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் ஜப்பானின் ரின் இவானாகா-நகானிஷி ஜோடியை வீழ்த்தியதன் வழி மலேசியாவின் பியர்லி- எம்.தியானா ஜோடி காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வானது.

கடந்தாண்டிலும் இப்போட்டியில் கலந்து கொண்ட இந்த ஜோடிக்கு காலிறுதிச் சுற்றுக்கு நுழையும் வாய்ப்பு கிடைத்தது இது இரண்டாவது முறையாகும்.

உலகின் 15 இடத்தில் உள்ள இந்த மலேசிய ஜோடி தொடக்கச் சுற்றில் சற்று மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-19 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவியது. எனினும், பின்னடைவிலிருந்து மீண்டெழுந்த அந்த அணி நிமிடப் போராட்டத்திற்குப் பின்னர் 21-16 என்ற புள்ளிகளில் மூன்றாவது சுற்றில் வாகை சூடியது.

இந்த மலேசிய அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறுவது சிரமமானதாக இருக்காது எனக் கருதப்படுகிறது. காரணம், உலகின் 64வது நிலை ஆட்டக்காரர்களான தென் கொரியாவின் ஜியோங் நா என்-கிம் ஹி ஜியோ ஜோடியை மலேசிய பியர்லி- தியானா ஜோடி எதிர் கொள்கிறது.

இதனிடையே, ஆண்கள் இரட்டையர் பிரிவில் நாட்டைப் பிரதிநிதித்து ஆடிய ஒங் யு சின்-தியோ இ யீ ஜோடி இந்தோனேசியாவின் முகமது ஷோபிபுல் பிக்ரி- பாகாஸ் மௌலானா ஜோடியிடம் தோல்வி கண்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.