MEDIA STATEMENT

ஆரம்பப் பள்ளிகளில் லாக்கர் திட்டத்தின் முன்னேற்றம்

17 மார்ச் 2022, 9:39 AM
ஆரம்பப் பள்ளிகளில் லாக்கர் திட்டத்தின் முன்னேற்றம்

புத்ராஜெயா, மார்ச் 17 - கல்வி அமைச்சின் சிறந்த சேவை விருது வழங்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்ட மூத்த கல்வி அமைச்சர் டத்தோ ராட்ஸி ஜிடினிடம்,  அவர் கடந்த மார்ச் 6 அன்று, மாணவர்களுக்கான கனமான பள்ளிப் பைகளின் சிக்கலுக்கு, தீர்வு குறித்த வினாவிற்கு , ஆரம்பப் பள்ளிகளில் லாக்கர்கள் திட்டம் , விரைவில்  அமல் படுத்தப்படும்  என்றார்.

தனது அமைச்சு லாக்கர்கள் நீண்ட காலம் தாங்குதல் மற்றும் உயர் தரத்தில்  இருப்பதை உறுதிசெய்வது உட்பட சில  நடைமுறைகளை  வரைந்து வருகிறது என்று ராட்ஸி கூறினார்.

"பொருத்தமான இடங்கள் அடையாளம் காணப்பட்டவுடன் அமைச்சு செயல்முறையை மேற்கொள்ளும், ஆனால் பின்பற்றச் சில நடைமுறைகள் உள்ளன," என்று அவர் மேலும் கூறினார்.

இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும், முதல் கட்டம் ஒன்றாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களை உள்ளடக்கியது, இது இரண்டு அமர்வுகளை கொண்டுள்ள 10,662 வகுப்புகள் மற்றும் 323,186 மாணவர்களை உள்ளடக்கியது.

இரண்டாம் கட்டம் நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களை உள்ளடக்கியிருக்கும், இத்திட்டம் 2023 இல் இரண்டு அமர்வுகளில் செயல்படுத்தப் படும்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.