MEDIA STATEMENT

சிலாங்கூர் MAC தேசியக் கால்பந்து அணி வென்றது, பகாங் ரேஞ்சர்ஸ் மீண்டும் தோல்வி

7 மார்ச் 2022, 3:01 PM
சிலாங்கூர் MAC தேசியக் கால்பந்து அணி வென்றது, பகாங் ரேஞ்சர்ஸ் மீண்டும் தோல்வி

கோலாலம்பூர், மார்ச் 7: தேசியப் பிரிமியர் ஃபுட்சல் லீக் 2022 போட்டியை ஷா ஆலம் பானாசோனிக் தேசிய விளையாட்டு வளாகத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

அதில் ஷா ஆலம் சிட்டியை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்துச் சிலாங்கூர் MAC ஃபுட்சல் அணி வென்றது..

16வது நிமிடத்தில் மேதியஸ் வாஸ்கோன்செலோஸ் சில்வா அடித்த ஒற்றைக் கோல் ஏடி ஷைருல்லிசாம் அணிக்குப் போதுமானதாக இருந்தது, இதன் மூலம் லீக்கில் தொடர்ந்து இரண்டு முறை இரண்டாம் இடத்தைப் பிடித்த பகாங் ரேஞ்சர்ஸ் கனவைச் சிதைத்தது.

எட்டாவது சுற்றில் நடவடிக்கையின் விளைவாக, மார்ச் 13 அன்று பகாங் ரேஞ்சர்ஸுக்கு எதிராக ஒரே ஒரு போட்டி மட்டுமே எஞ்சியிருந்ததைத் தவிர, 36 புள்ளிகளைப் பெற்று 15 அணிகள் கொண்ட பட்டியலில் சிலாங்கூர் MAC முதல் இடத்தில் உள்ளது.

முன்னதாக 32 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்த ஜெரார்ட் காசாஸ் பயிற்சியளித்த பகாங் ரேஞ்சர்ஸ், கடந்த சனிக்கிழமை மலேசிய ஆயுதப் படையை 7-1 என்ற கணக்கில் தோற்கடித்ததன் வழி ​​போட்டியை வெல்வதற்கான வாய்ப்பைப் பெற முயன்றது.

இருப்பினும், அதே நாளில் சிலாங்கூர் MAC சிலாங்கூர் TOTயை 3-2 என்ற கணக்கில் வென்றபோது அந்த ஆசை நிறைவேறவில்லை.

சிலாங்கூர் MAC இதற்கு முன்பும் 2019 MPFL லை வென்றதனால் இரண்டாம் இடம் என்ற பட்டத்துடன் பகாங் ரேஞ்சர்ஸ ஏமாற்றமடைந்தது.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.