ECONOMY

ஆர்டிகே ஆன்டிஜென் சோதனை முடிவு சந்தேகத்திற்குரியதாக காட்டும் காணொளியை நம்ப வேண்டாம் 

7 மார்ச் 2022, 3:25 AM
ஆர்டிகே ஆன்டிஜென் சோதனை முடிவு சந்தேகத்திற்குரியதாக காட்டும் காணொளியை நம்ப வேண்டாம் 

பாகன் செராய், மார்ச் 7 - கோவிட்-19 ரேபிட் டெஸ்ட் கிட்கள் (ஆர்டிகே) சந்தேகத்திற்குரிய முடிவுகளைத் தருவதாகவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு வீடியோ தகவல்களைதகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறது.படுகிறது.

துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி, அதற்குப் பதிலாக, இதுபோன்ற சம்பவங்கள் குறித்து அதிகாரிகள் அல்லது சுகாதார அமைச்சகத்திடம் புகார் அளிக்க வேண்டும், இதனால் வீடியோவின் நம்பகத்தன்மை மற்றும் பயன்படுத்தப்பட்ட சோதனை கருவியின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க விசாரணை நடத்த முடியும்.

"ஒவ்வொரு RTK-ஆன்டிஜென் சுய-பரிசோதனை கருவிகளும் மருத்துவச் சாதன ஆணையத்தின் (MDA) அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும், மேலும் அங்கீகரிக்கப் படாதபடாத கருவிகளை விற்பது குற்றமாகும்.

"போலி தடுப்பூசி சான்றிதழ்களின் விற்பனையிலும் இதுவே பின்பற்ற படுகிறதுபடுகிறது மற்றும் இது பொதுச் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம்" என்று இன்று அல்-அஸ்ரியா பள்ளிவாசலில் இஸ்லாமிய மத நல அமைப்பு மற்றும் பாகன் செராய் மலாய் சமூகத்தின் 60 வது ஆண்டு பொதுக் கூட்டத்தை நடத்திய பின்னர்ச் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.