ECONOMY

கோவிட்-19 சோதனைக் கருவியின் விலை உயர்வு,  அதனை RM5க்குக் கீழே குறைக்க வற்புறுத்தப்படுகிறது.

3 மார்ச் 2022, 11:00 AM
கோவிட்-19 சோதனைக் கருவியின் விலை உயர்வு,  அதனை RM5க்குக் கீழே குறைக்க வற்புறுத்தப்படுகிறது.

ஷா ஆலம், மார்ச் 3: மக்களின் சுமையைக் குறைக்கும் நடவடிக்கையாக, கோவிட்-19 சுய- பரிச் சோதனைக் கருவியின் (RTK-Ag) உச்சவரம்பு விலையை RM5க்குக் கீழே நிர்ணயம் செய்யுமாறு அரசாங்கத்திடம் கேட்கப்பட்டுள்ளது.

 

லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபஹாமி பாட்சில் கூறுகையில், கோவிட்-19 நோய்த்தொற்றில் இருந்து விடுபடுவதை உறுதிசெய்வதற்காகத் தற்போது சுய-சோதனைக் கருவிகளைப் பயன்படுத்துவது ஒரு சமூக வழக்கமாகிவிட்டது.

 

பள்ளிக்கூடம் மற்றும் வேலைக்குச் செல்லும் முன் எப்போதும் சுய-சோதனைக் கருவிகளைப் பயன்படுத்து வழக்கமாகிறது  அதனால் இந்த விலை நியாயமற்றது.

 

“எனவே தயவுசெய்து உச்சவரம்பு விலையை RM5க்குக் குறைத்து வைப்பதைக் கருத்தில் கொள்ளவும். RM4.90 மிகவும் நல்லது, ஆனால் RM10 மிகவும் விலை உயர்ந்தது,” என்று அவர் இன்று திவான் ரக்யாட் அமர்வில் கூறினார்.

 

பார்ட்டி கெஅடிலான் ரக்யாட்டின் (KEADILAN) தகவல் தொடர்பு இயக்குநருமான அவர், அதற்கு RM1,000 கிட் கொள்முதல் வரி தள்ளுபடியை வணிகர்கள் கோரலாம், அது  குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு ஏற்ற ஏற்பாடாக இருக்கும்  என்றார்   அவர்..

 

நேற்று, ஸ்டீவன் சிம் சீ கியோங் (புக்கிட் மெர்தாஜாம்) மற்றும் சா கீ சின் (ராசா) உட்படப் பல பக்காத்தான் ஹராப்பான் எம்.பி.க்களால் சுய-கிட் பிரச்சினையை கொண்டு வந்தனர்..

 

கடந்த ஆண்டு செப்டம்பரில் அரசாங்கம் RTK-Ag டெஸ்ட் கிட்டின் அதிகபட்சச் சில்லறை உச்சவரம்பு விலையை RM19.90 என நிர்ணயித்தது

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.