ECONOMY

மருத்துவமனைக்கு வெளியே மரணங்கள்- 91 விழுக்காட்டினருக்கு நோய்த் தொற்று இருப்பது தெரியவில்லை

3 மார்ச் 2022, 9:21 AM
மருத்துவமனைக்கு வெளியே மரணங்கள்- 91 விழுக்காட்டினருக்கு நோய்த் தொற்று இருப்பது தெரியவில்லை

செர்டாங், மார்ச் 3- மருத்துவமனைகளுக்கு வெளியே மரணமடைவோரில் (பி.ஐ.டி.) சுமார் 91 சதவீதம் பேர் தாங்கள் கோவிட்-19  நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறியாதவர்களாக உள்ளதாகச் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் கூறினார்.

கடந்த பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 21 வரையிலான காலகட்டத்தில் பதிவான 113  பி.டி.ஐ. சம்பவங்களை மையமாகக் கொண்டு சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வில்  இந்த விபரம் தெரியவந்ததாக அவர் கூறினார்.

பி.ஐ.டி. சம்பவங்கள் அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம், அதாவது சுகாதார மையங்களில் சிகிச்சை பெறுவதற்கு முன்பே பலர் இறந்துவிடுகின்றனர். இது கவலை அளிப்பதாக உள்ளது என்று அவர் சொன்னார்.

இந்தக் காலகட்டத்தில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் 91 விழுக்காட்டினருக்குத் தாங்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவில்லை என்று கோவிட்-19 நிலவரம் குறித்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள பொது மக்கள் குறிப்பாக முதியவர்கள் உடனடியாகச் சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுமாறு கைரி அறிவுறுத்தினார்.

தங்களுக்கு ஏற்பட்ட அறிகுறிகள் லேசானவை என்றும் உடனடியாக மருத்துவச் சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் பலர் கருதுகின்றன. நோய்த் தொற்றைக் கண்டறியும் சமயத்தில் நிலைமை விபரீதமாகி விடுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.