ECONOMY

பள்ளி மாணவர்கள் தடுப்பூசிக்குப் பிறகு பக்க விளைவை எதிர்நோக்கும் வீடியோ- சுகாதார அமைச்சு மறுப்பு

23 பிப்ரவரி 2022, 7:28 AM
பள்ளி மாணவர்கள் தடுப்பூசிக்குப் பிறகு பக்க விளைவை எதிர்நோக்கும் வீடியோ- சுகாதார அமைச்சு மறுப்பு

கோலாலம்பூர், பிப் 23: தடுப்பூசி போட்ட பிறகு பள்ளி மாணவர்களுக்குப் பக்க விளைவு ஏற்பட்டதாகச் சமூக ஊடகங்கள் மூலம் பரவும் வீடியோவைச் சுகாதார அமைச்சகம் (MOH) மறுத்துள்ளது.

இந்த வீடியோ 2019 ஆம் ஆண்டு ஜோகூர், பாசிர் கூடாங்கில் உள்ள ஒரு பள்ளியில் விஷ வாயு  கலந்த சம்பவம் தொடர்பான பழைய வீடியோ என்று அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"சமூகத்தின் மத்தியில் குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு தவறான தகவலையும் பரப்ப வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள், மாறாக உண்மையான மற்றும் புதுப்பித்த தகவலைப் பெறச் சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வச் சமூக ஊடகத்தைப் பார்க்கவும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.