ECONOMY

கோவிட்-19 எண்ணிக்கை நேற்று சற்று குறைந்து 25,099 ஆகப் பதிவானது

22 பிப்ரவரி 2022, 4:08 AM
கோவிட்-19 எண்ணிக்கை நேற்று சற்று குறைந்து 25,099 ஆகப் பதிவானது

ஷா ஆலம், பிப்  22 - நாட்டில் கோவிட் -19 நோய்த் தொற்று விகிதம் கடந்த இரு நாட்களாக  குறைவான எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. நேற்று மொத்தம் 25,099  பேர் இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகினர்.

நேற்று நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 100 பேர் அல்லது 0.4 விழுக்காட்டினர் கடுமையான தாக்கம் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியவர்களாவர். எஞ்சிய  24,999 பேர் அல்லது 99.6  விழுக்காட்டினர் நோய்க்கான அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறி கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பைக் கொண்டுள்ளனர்.

மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட பாதிப்பை எதிர்நோக்கியவர்களில் 25 விழுக்காட்டினர் அல்லது 25 பேர் தடுப்பூசியை முழுமையாக அல்லது அறவே பெறாதவர்கள் ஆவர். அதே நேரத்தில் 53 விழுக்காட்டினர் அல்லது 53  பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். ஆனால், பூஸ்டர் எனப்படும்  ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறவில்லை.

பிரிவுகள் வாரியாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு

பிரிவு 1: 7,763 சம்பவங்கள் (30.93 சதவீதம்)

பிரிவு 2: 17,236 சம்பவங்கள் (68.67 சதவீதம்)

பிரிவு 3: 56  சம்பவங்கள் (0.23 சதவீதம்)

பிரிவு 4: 23 சம்பவங்கள் (0.09 சதவீதம்)

பிரிவு 5: 23 சம்பவங்கள் (0.081 சதவீதம்)

தீவிர சிகிச்சைப் பிரிவில்  மொத்தம் 108 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில்   164 செயற்கை  சுவாச உதவி தேவைப்படுகிறது.

இதற்கிடையில் கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 43 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டன.

இதுவரை கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 32 லட்சத்து 46 ஆயிரத்து 779 ஆகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.