ECONOMY

மித்ரா நிதி மோசடி தொடர்பாக இருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

18 பிப்ரவரி 2022, 3:06 PM
மித்ரா நிதி மோசடி  தொடர்பாக இருவர்  நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

ஷா ஆலம் 18 பிப் ;- மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) நிதியில் கடந்த ஆண்டு ரிங்கிட் 5.18 மில்லியன் நிதியை உள்ளடக்கிய குற்றவியல் நம்பிக்கை மோசடி (CBT) தொடர்பாக இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு நிறுவனத்தின் இயக்குநரான 52 வயதான எல்.ரகு ராமன் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

கடந்த ஆண்டு ஜனவரி 19 முதல் ஆகஸ்ட் 18 வரை தெலுக் இந்தானில் உள்ள சிஐஎம்பி கிளையில் அவர் இந்தச் செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

ரகு ராமன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை, ரோத்தான் மற்றும் அபராதம் விதிக்கப்படும் தண்டனைச் சட்டம் பிரிவு 409ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்..

அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் RM50,000 ஜாமீன் நிர்ணயம் செய்தார் ஈப்போ, செஷன் கோட் நீதிபதி எம். பக்ரி அப்துல் மஜித் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீனை செலுத்தினார். நீதிமன்றம் ஏப்ரல் 21 ஆம் தேதியை மேற்படி வழக்கிற்கான நாளாக நிர்ணயித்துள்ளது.

இதற்கிடையில் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவரை கொண்டுவந்தது கடந்த 2019ல் மித்ரா கல்வி மற்றும் பயிற்சி உதவி இயக்குனர் ஆர்.கவிதாவிடம் தவறான ஆவணங்களை சமர்ப்பித்து (மித்ரா) நிதியில் ரிங்கிட் 276,625 பெற்றதாக ஒரு நிறுவன இயக்குநர் டத்தோ ரகு பிவி பாஸ்கரன் 61 வயது மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் 35 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (MACC) சட்டம் 2009 இன் பிரிவு 18 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அவருக்கு நீதிமன்றம் ஒரு உத்தரவாதத்துடன் RM25,000 ஜாமீன் நிர்ணயித்தது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் RM10,000 ஐ இன்றும், மீதமுள்ளதை அடுத்த புதன்கிழமைக்குள் (பிப் 23) செலுத்தவும் உத்தரவிட்டது, மேலும் முழு வழக்கை நடத்த மார்ச் 21யை தேதியாக நிர்ணயிக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.