ECONOMY

லங்காவியின் சர்வதேச சுற்றுலா ஏற்பாடு, நாட்டின் எல்லைகள் திறக்கப்படும் வரை நீட்டிப்பு

17 பிப்ரவரி 2022, 12:51 PM
லங்காவியின் சர்வதேச சுற்றுலா ஏற்பாடு, நாட்டின் எல்லைகள் திறக்கப்படும் வரை நீட்டிப்பு

கோலாலம்பூர், பிப் 17: பிப்ரவரி 16 முதல் புதுப்பிக்கப்பட்ட  நிலையான செயல்பாட்டு நடைமுறையுடன் (SOP) நாட்டின் எல்லைகள் திறக்கப்படும் வரை லங்காவி சர்வதேச சுற்றுலா ஏற்பாடு (எல்ஐடிபி) நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்த கோவிட்-19 தொடர்பாக நான்கு அமைச்சர்கள் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.

"எல்ஐடிபி மூலம் மலேசியாவுக்குள் நுழையும் வெளிநாட்டுப் பயணிகளுக்கான எஸ்.ஒ.பி மற்றும் வழிகாட்டிகள் சுகாதார அமைச்சகத்தால் சமீபத்தில் பரிசீலிக்கபட்டு 16 பிப்ரவரி 2022 அன்று வெளியிடப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேம்படுத்தபட்ட இந்த எஸ்.ஒ.பி எதிர்கால எல்லை திறப்பு SOP களுக்கு ஒரு அளவுகோலாக இருக்கும். ஊக்க தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் நான்காவது நாளில் கோவிட்-19 RT-PCR பரிசோதனை அல்லது ஐந்தாம் நாளில் RTK சுயப் பரிசோதனைக் கருவியின் மூலம் நோய்த் தொற்று இல்லை என்று உறுதிபடுத்தப்பட்டால் அவர்கள் லங்காவித் தீவிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவது அந்த எஸ்.ஒ.பிகளில் ஒன்றாகும்.

கூடுதலாக, 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் தடுப்பூசி போடப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தைக் காட்டாமல் பயணம் செய்யலாம்.அதே நேரத்தில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கோவிட்-19 மற்றும் பயணத்திற்காக 50,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள காப்பீட்டுக் கொள்கையை வாங்க வேண்டும் என்றும் இந்த நிபந்தனைக்கு வெளிநாட்டில் வாழும் மலேசிய குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் எஸ்.ஒ.பி குறிப்பிடுகிறது.

LTIB க்காக கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் 2 (KLIA2) வழியாக உள்வரும் விமானங்கள் பிப்ரவரி 22 முதல் அனுமதிக்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.