ECONOMY

300,000க்கும் அதிகமான முதியவர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் - சுகாதார தலைமை இயக்குநர்

17 பிப்ரவரி 2022, 7:04 AM
300,000க்கும் அதிகமான முதியவர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் - சுகாதார தலைமை இயக்குநர்

கோலாலம்பூர், பிப் 17: பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நாட்டில் மொத்தம் 336,848 முதியவர்கள் அல்லது 11.5 விழுக்காட்டினர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

அதே காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட மொத்த 32,034 இறப்புகளின் எண்ணிக்கை 61.3 விழுக்காடு அல்லது 19,646 இறப்புகள் என்று பேஸ்புக்கில் கூறினார். தடுப்பூசியைப் பொறுத்தவரை, மொத்தம் 2,258,521 முதியவர்கள் அல்லது 67.7 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்க தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் மற்றும் 3,335,309 பேர் அல்லது 96 விழுக்காட்டினர் கோவிட்-19 இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

"கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து முதியவர்களைக் காக்கவும், முழுமையான தடுப்பூசிகள் மற்றும் ஊக்க தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளவும்" என்று அவர் கூறினார். -பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.