ECONOMY

கோவிட்-19 அதிகரிப்பதால் மாரா தொழிற்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு  ஒத்திவைப்பு

17 பிப்ரவரி 2022, 5:35 AM
கோவிட்-19 அதிகரிப்பதால் மாரா தொழிற்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு  ஒத்திவைப்பு

ஷா ஆலம், பிப் 17: மார்ச் 2 முதல் 23 வரை  நடைபெற இருந்த மாரா பல்கலைக்கழகத்தின் (UiTM) 93வது பட்டமளிப்பு விழாவை ஒத்திவைத்துள்ளது.

UiTM ஷா ஆலமில் 27,287 பட்டதாரிகளை உள்ளடக்கிய பட்டமளிப்பு விழா ஒத்திவைக் கப்பட்டது; சரவாக் மற்றும் சபா கிளைகள் பல்கலைக்கழக நிர்வாக கவுன்சில் (MEU) கூட்டம் எண். 5/2022, நேற்று (பிப் 16) மூலம் முடிவு செய்யப்பட்டது என ஒரு அறிக்கையில் தெரிவுத்தது .

பட்டமளிப்பு விழா இந்த ஆண்டு ஜூன் முதல் ஜூலை வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒத்திவைப்பு மலேசியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றின் பரவலின் சமீபத்திய நிலவரத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று திடீரென அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மலேசிய சுகாதார அமைச்சகத்தின் (MOH) பரிந்துரைகள் மற்றும் உயர் கல்வி அமைச்சகத்தின் (MOHE) முன் எச்சரிக்கை அடிப்படையில் இது அமைந்துள்ளது.

இதனால் பட்டதாரிகள் மற்றும் பெற்றோர்களுக்கு  ஏதேனும் சிரமம் ஏற்படுத்தியிருந்தால்  UiTM நிர்வாகம்  அதற்கு மன்னிப்பு கேட்கிறது. UiTM மேலும் நிலைமை கட்டுப்பாட்டை மீறியதற்கு வருந்துகிறது மற்றும் இந்த விஷயத்தில் அனைத்து தரப்பினரும் வழங்கிய புரிதல், ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை பெரிதும் பாராட்டுகிறது.

93வது UiTM பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்படுவது குறித்த சமீபத்திய தகவலை konvokesyen.uitm.edu.my இணையதளத்தில் காணலாம் அல்லது அமினா அமானை: wa.me/+60355443110 அல்லது ரோஜானி முகமது நோ: wa.me/+6034554431 தொடர்பு கொள்ளலாம்.

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.