ANTARABANGSA

சிங்கப்பூரில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 19,420 பேர் பாதிப்பு 

16 பிப்ரவரி 2022, 6:54 AM
சிங்கப்பூரில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 19,420 பேர் பாதிப்பு 

சிங்கப்பூர், பிப் 16- சிங்கப்பூரில் நேற்று 19,420 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். 19,179 உள்நாட்டிலும் எஞ்சிய 241 சம்பவங்கள் வெளிநாட்டினர் மூலமாகவும் பரவின.

இந்நோய்த் தொற்றுக்கு நேற்று எழுவர் பலியானதை அந்நாட்டு சுகாதார அமைச்சு தனது அகப்பக்கத்தில்  வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.

கடந்த 2020 ஆம்  ஆண்டில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவியது முதல் அந்நாட்டில் பதிவான அதிக எண்ணிக்கையிலான தினசரி கோவிட்-19 எண்ணிக்கை இதுவாகும் என்று அந்நாட்டின் ஸ்ட்ரேய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகை கூறியது.

கடந்த 28 நாட்களில் பாதிக்கப்பட்ட 191,882 பேரில் 99.7 விழுக்காட்டினர் நோய்க்கான அறிகுறியை கொண்டிராதவர்கள் அல்லது லேசான அறிகுறியைக் கொண்டிருப்பவர்களாவர்.

அந்நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 497,997 ஆகவும் மரண எண்ணிக்கை 913 ஆகவும் உள்ளது.

இம்மாதம் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 90 விழுக்காட்டு சிங்கப்பூரியர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் 64 விழுக்காட்டினருக்கு பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.