ECONOMY

இளங்கலை மாணவர்கள் ஜே.பி.ஏ ஸ்பான்சர்ஷிப்பிற்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்

15 பிப்ரவரி 2022, 8:14 AM
இளங்கலை மாணவர்கள் ஜே.பி.ஏ ஸ்பான்சர்ஷிப்பிற்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்

ஷா ஆலாம்,பிப் 15: இளங்கலைப் படிப்பைத் தொடரும் மாணவர்கள் பொது சேவைத் துறையின் (ஜே.பி.ஏ) ஸ்பான்சர்ஷிப்பிற்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

பிப்ரவரி 14 முதல் 27 வரை http://esilav2.jpa.gov.my என்ற இணையத்தலம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று சிலாங்கூர் மாநிலச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேசிய பட்டபடிப்பு திட்டம் (PIDN) 2022 மூலம் வழங்கப்படும் நிதியுதவியானது, பொதுப் பல்கலைக்கழகங்கள் (UA), பிரீமியர் பாலிடெக்னிக்குகள் மற்றும் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் (GLU) படிக்கும் மாணவர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தின் நிபந்தனைகளில், விண்ணப்பதாரர் ஒரு குடிமகனாக இருக்க வேண்டும், ஜே.பி.ஏ ஆல் பெற்றோர் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படாதவராக இருக்க வேண்டும், அதே கல்விக்கு  மற்ற தரப்பினரிடமிருந்து ஸ்பான்சர்ஷிப்பைப் பெறாமல் இருக்க வேண்டும் மற்றும் விளம்பரத்தின் இறுதித் தேதிக்கு முன்பே முதல் பட்டப்படிப்பைத் தொடங்கியிருக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு, 03-8885 3297 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது pidn2022@jpa.gov.my மின்னஞ்சல் மூலம் தொடர்புக் கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.