ALAM SEKITAR & CUACA

ஆதரவற்ற விலங்குகளின் உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பூனை தத்தெடுப்புத் திட்டம் – எம்.பி.எஸ்.ஏ

14 பிப்ரவரி 2022, 8:22 AM
ஆதரவற்ற விலங்குகளின் உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பூனை தத்தெடுப்புத் திட்டம் – எம்.பி.எஸ்.ஏ

ஷா ஆலம்,பிப் 14: ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (எம்.பி.எஸ்.ஏ) இந்த மாத வாகனம் இல்லாத தினத்துடன் இணைந்து 15 விலங்குகளை உள்ளடக்கிய பூனை தத்தெடுக்கும் நிகழ்ச்சி இங்குள்ள செக்சென் 14 இல் உள்ள டத்தாரான் மெர்டேகாவில் ஏற்பாடு செய்துள்ளது.

மொத்தத்தில், நான்கு பூனைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய உரிமையாளர்களைப் பெற்றதாக அதன் கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர் ஷாஹ்ரின் அகமது தெரிவித்தார்.

இந்தத் திட்டம் செல்லப்பிராணிகளுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்க உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அனைத்து தரப்பினரின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டுள்ளது.

"அதுமட்டுமின்றி, உரிமையாக்கப்பட்ட விலங்குகளை கவனித்து கொள்ள வேண்டிய பொருப்பைப்  பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தளமாகவும் இது உள்ளது," என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அனைத்து பூனைகளும் சந்தைகள் மற்றும் ஸ்டால்கள் போன்ற பல பகுதிகளில் எம்.பி.எஸ்.ஏ மன்றம் பிடித்ததாக அவர் கூறினார்.

"புதிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன், அனைத்து பூனைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு, சுகாதார சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன," என்று அவர் கூறினார். திட்டத்தின் வெற்றிக்காக எம்.பி.எஸ்.ஏ ஆனது iVET மருத்துவ மையம் ஷா ஆலமின் (iVET Petcare) ஒத்துழைப்பையும், நஸ்வான் ரிசோர்சஸ் எஸ்.டி.என் பி.எச்.டி இலிருந்து உணவு நிதியுதவியையும் பெற்றதாக அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.