ALAM SEKITAR & CUACA

ஆசிய பூப்பந்து போட்டி (BATC) 2022-ஐப் பார்க்க மொத்தம் 200 பார்வையாளர்களுக்கே அனுமதி!

14 பிப்ரவரி 2022, 3:37 AM
ஆசிய பூப்பந்து போட்டி (BATC) 2022-ஐப் பார்க்க மொத்தம் 200 பார்வையாளர்களுக்கே அனுமதி!

ஷா ஆலம்,பிப் 14: செத்தியா சிட்டி கன்வென்ஷன் சென்டரில் பிப்ரவரி 15 முதல் 20 வரை நடைபெறும் ஆசிய அணி பூப்பந்து போட்டி (BATC) 2022-ஐப் பார்க்க மொத்தம் 200 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆறு நாள் போட்டிகள் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.  விளையாட்டுகள் காலை 10 மற்றும் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளதாக சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சிலின் (MSN) நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.

இப்போட்டிக்கான டிக்கெட், ஒரு நாள் முன்னதாக முன்பதிவுக்கு திறக்கப்படும், இது "டிக்கெட்டுகள் வீணாவதைத் தவிர்க்கவும், அனைவருக்கும்  விளையாட்டுகளை காணும் வாய்ப்பை வழங்கவும்  ஏற்ப  ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு நாள் முன்னதாக  டிக்கெட்டுக்கான முன்பதிவுகள் திறக்கப்படும்" என்று முகமது நிஜாம் மர்ஜுகி  சிலாங்கூர்கினியிடம் தெரிவித்தார்.

பாதுகாப்பு,வளையம் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) பராமரித்தல் ஆகிய அம்சங்களில் போட்டி முழுவதும் மொத்தம் 200 பணியாளர்கள்  ஈடுபட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

"இந்த காலத்தில்,  மக்கள் தொற்று நோய் பரவுவதை தடுக்க  சுய பரிசோதனை கருவிகளை பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் கோவிட் -19 ஸ்கிரீனிங்  செய்து கொள்ள வேண்டும்.  என்று அவர் மேலும் கூறினார்.

https://selangorbatc2022.com என்ற இணைப்பின் மூலம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு ஒவ்வொரு போட்டிக்கும் முந்தைய நாள் மதியம் 12 மணி முதல் இரவு 11.59 மணி வரை திறந்திருக்கும். வெற்றிகரமாக முன்பதிவு செய்தவர்கள் மின்னஞ்சல் மூலம் மின்னணு டிக்கெட்டைப் பெறுவார்கள், போட்டி நடைபெறும் அரங்கில் நுழைவதற்கு முன் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் எண்ணுடன் அதைக் கொண்டு வர வேண்டும்.

ஆசியா பூப்பந்து மற்றும் மலேசியாவின் பூப்பந்து சங்கத்துடன் இணைந்து எம்.எஸ்.என் சிலாங்கூர் ஒருங்கிணைத்த BATC 2022 ஐ சிலாங்கூர் முதல் முறையாக நடத்துகிறது. மலேசியாவைத் தவிர, இந்தோனேசியா, இந்தியா, தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகள் போட்டியிடுகின்றன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.