ஷா ஆலம், பிப் 13- அம்பாங்கிலுள்ள சமூக நல இல்லங்கள் மற்றும் சங்கங்களுக்கு 70,000 வெள்ளி நிதியுதவி கடந்த வெள்ளிக் கிழமை வழங்கப்பட்டது.உணவு விநியோக நிறுவனமான டி.எச் சி. சென்.பெர்ஹாட் மற்றும் பாண்டான் இண்டா தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
ரூமா கித்தா சமூக நல இல்லம், மலேசிய இமாம் ஏய்ட்ஸ்/எச்.ஐ.வி. நோயாளிகள் சங்கம், தங்கம் இல்லம் சமூக நல மையம் ஆகியவற்றுக்கு
தலா 20,000 வெள்ளியும் மெஸ்ரா ஹோம் இல்லத்திற்கு 10,000 வெள்ளியும் வழங்கப்பட்டதாக தனது முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக நலப் பணிகளை மேலும் சீராக மேற்கொள்வதில இந்த நிதியுதவி சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு துணை புரியும் என்றும் அவர் சொன்னார்.
ECONOMY
அம்பாங்கிலுள்ள சமூக நல இல்லங்களுக்கு வெ.70,000 நிதியுதவி
13 பிப்ரவரி 2022, 7:58 AM


