ECONOMY

பண்டார் உத்தாமா தொகுதியில் வரும் சனிக்கிழமை இலவச சுகாதார பரிசோதனை

12 பிப்ரவரி 2022, 8:03 AM
பண்டார் உத்தாமா தொகுதியில் வரும் சனிக்கிழமை இலவச சுகாதார பரிசோதனை

ஷா ஆலம்,பிப் 12: பண்டார் உத்தாமா தொகுதி ஏற்பாட்டில் வரும் பிப்ரவரி 19 அன்று கம்போங் சுங்கை காயு ஆராவில் வசிப்பவர்களுக்கு இலவச சுகாதார பரிசோதனையை நடைபெறவுள்ளது.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அசுந்தா மருத்துவமனையின் ஆதரவிலான இந்த மருத்துவ பரிசோதனை இயக்கம் கம்போங் சுங்கை காயு ஆரா சமூக மண்டபத்தில் காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

இந்தத் திட்டம், மாதத்திற்கு RM2,500 க்கும் குறைவாக வருமானம் பெறுபவர்களின் சுமையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, பொது மக்கள் தங்கள் உடல்நிலையை அடையாளம் காண இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைக்கிறேன், என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார். ஆர்வமுள்ளவர்கள் முழுமையான ஆவணங்களை இணைத்து http://tiny.cc/KlinikKayuAra எனும் அகபக்கம் வாயிலாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றார் அவர்.

அசுந்தா மருத்துவமனை சமூக நல வெளிநோயாளி திட்டத்திற்கான (SWOP) அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நிபந்தனையை நிரூபிக்கும் விதமாக அவர்கள் சம்பள விபர அறிக்கை அல்லது சமூக நலத் துறையின் உதவிகளைப் பெறுவதற்கான சான்றுகளை சமர்பிக்க வேண்டும் என்றார் அவர். மேல் விபரங்களுக்கு 016-6849371 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.