கோலாலம்பூர், பிப் 11: 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அல்லது பிக்கிட்களுக்கான கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் பிப்ரவரி 3 ஆம் தேதி செயல்படுத்தப்பட்டதிலிருந்து, பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு தயங்குகின்றனர்.
பெரும்பாலான பெற்றோர்கள், சிரார்களுக்கு "வலுவான" தடுப்பூசியைப் பெற முடியாது என்பதை தவிர தங்கள் குழந்தையை "ஆய்வக எலி" போல நடத்த விரும்பவில்லை என்னும் கூற்றைத் சுகாதார அமைச்சகத்தின் (MOH) அதிகாரப்பூர்வ பேஸ்புக்கிற்குச் சென்று கருத்துகளை தெரிவித்தனர்.
இத்தகைய அணுகுமுறை, இலக்கு வைக்கப்பட்ட குழந்தைகளில் 80 சதவீதம் பேர் ஒரு வருடத்திற்குள் முதல் தடுப்பூசியை பெறுவதையும், 60 சதவீதம் பேர் ஆறு மாதங்களுக்குள் இரண்டு தடுப்பூசியை முடிப்பதையும் உறுதிசெய்யும் அரசாங்கத்தின் இலக்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம்.
சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் தடுப்பூசியில் கவனம் செலுத்தி, சார்ச்-கோவி 2 நோய்த்தொற்றின் முழு சிக்கலையும் பார்க்கத் தவறிவிட்டனர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் மரணத்திற்கு இந்த கோவிட்-19 வழிவகுக்கும் என்றும் பெரும்பாலான சுகாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
