கோலாலம்பூர், பிப் 11 - 2022 இல் பணவீக்கம் மிதமானதாக இருக்கும் என்று மலேசிய தேசிய வங்கி எதிர்பார்க்கிறது, அதன் நீண்ட கால சராசரிக்கு அது நெருங்கியுள்ளது என்றும், அதே நேரத்தில் பணவீக்கம் இந்த ஆண்டு மிதமாக இருக்கும்.
மத்திய வங்கி தேவை மற்றும் செலவு அழுத்தங்களில் நடந்து வரும் முன்னேற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்கும் என்றும், பொருளாதார நிலைமைகள் மேம்படுவதால், விலை இயக்கவியலை நெருக்கமாக ஆராய தொழில் நிறுவனங்களுடன் தொடர்ந்து தீவிரமாக ஈடுபடும் என்று ஆளுநர் டான்ஸ்ரீ நோர் ஷம்சியா முகமது யூனுஸ் கூறினார்.
வீட்டுச் செலவுகள் இந்த ஆண்டு வளர்ச்சியைத் தொடந்து ஆதிக்கம் செலுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எளிதாக்குதல் மற்றும் வேலை சந்தை மேம்படுத்துதல் அத்துடன் வருமான நிலைமைகள் ஆகியவை நுகர்வு செயல்பாட்டை உயர்த்தும் காரணிகளாகும்.
இருப்பினும் தொற்றுநோய் தொடர்பான – குறிப்பாக சுகாதாரத்த்துறையின் தேவைக்கு ஏற்ப விநியோகக் கட்டுப்பாடுகளின் விலை அழுத்தங்கள் உணர்வுகள் மற்றும் உண்மையான செலவினங்களை எடைபோடக்கூடும் இருப்பினும், இவையாவும் தொற்றுநோயைச் சுற்றியுள்ள முன்னேற்றங்கள் என்று அவர் 2021 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிற்கான மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
2021 இல், சராசரி பணவீக்கம் 2020 இல் -1.2 சதவீதத்திற்கு எதிராக 2.5 சதவீதமாக இருந்தது, அதே நேரத்தில் முக்கிய பணவீக்கம் 2020 இல் 1.1 சதவீதத்திலிருந்து 0.7 சதவீதமாக இருந்தது.
அதிக பணவீக்கக் கட்டத்தில் மலேசியா நுழைவது பற்றிய கவலை இல்லை ஏனெனில், 1974-ம் ஆண்டு மாதிரியான பணவீக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்று நோர் சம்சியா கூறினார். - பெர்னாமா


