ECONOMY

கோவிட்-19 தொற்று இன்று கிட்டத்தட்ட 2,000 அதிகரித்து 20,939 ஆக உள்ளது

11 பிப்ரவரி 2022, 1:29 PM
கோவிட்-19 தொற்று இன்று கிட்டத்தட்ட 2,000 அதிகரித்து 20,939 ஆக உள்ளது

ஷா ஆலம், பிப் 11: கோவிட் -19 தொற்று விகிதம் நேற்று 19,090 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது இன்று கிட்டத்தட்ட 2,000 அதிகரித்து 20,939 ஆக பதிவாகியுள்ளது.

இன்று பதிவான மொத்த நோய்த் தொற்றுகளில் 20, 821 அல்லது 99.44 விழுக்காடு நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லாத ஒன்றாம் மற்றும் லேசான அறிகுறி கொண்ட இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவையாகும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இன்று பதிவான மொத்த பதிவுகளில், 118 பேர் அல்லது 0.56 விழுக்காட்டினர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளவர்கள்.

புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் இந்நோய்க்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 96 ஆயிரத்து 361 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் ட்விட்டரில் கூறினார்.

முன்பு போலவே, பெரும்பாலான நோயாளிகள் 2 ஆம் கட்டத்தில் உள்ளனர் மற்றும் ஒன்று முதல் ஐந்தாம் கட்டம் வரையிலான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளவர்கள் எண்ணிக்கை பின்வருமாறு:

1 ஆம் கட்டம் – 5,181 சம்பவங்கள் (24.74%)

2 ஆம் கட்டம் – 15,640 சம்பவங்கள் (74.7%)

3 ஆம் கட்டம் – 95 சம்பவங்கள் (0.45%)

4 ஆம் கட்டம் – 13 சம்பவங்கள் (0.06%)

5 ஆம் கட்டம் – 10 சம்பங்கள் (0.05%)

 

இதற்கு முன் மலேசியாவில் 26 ஆகஸ்ட் 2021 அன்று ஒரு புதிய தினசரி கோவிட்-19  நோய்தொற்று 24,599 ஆகப் பதிவு செய்யப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.