ECONOMY

17,134 சம்பவங்களுடன் தொடர்ந்து ஏற்றம் காண்கிறது கோவிட்-19 

9 பிப்ரவரி 2022, 9:36 AM
17,134 சம்பவங்களுடன் தொடர்ந்து ஏற்றம் காண்கிறது கோவிட்-19 

ஷா ஆலம், பிப் 9- நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மொத்தம் 17,134 சம்பவங்கள் பதிவாகின. நேற்று இந்த எண்ணிக்கை 13,944 ஆக இருந்தது.

புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் இந்நோய்க்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 56 ஆயிரத்து 332 ஆக உயர்ந்துள்ளது.

இன்று பதிவான நோய்த் தொற்றுகளில் 17,048 அல்லது 99.5 விழுக்காடு நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லாத ஒன்றாம் மற்றும் லேசான அறிகுறி கொண்ட இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவையாகும்.

எஞ்சிய 86 நோயாளிகள் அதாவது 0.5 விழுக்காட்டினர் மட்டுமே மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

ஒன்று முதல் ஐந்தாம் கட்டம் வரையிலான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளவர்கள் எண்ணிக்கை வருமாறு-

1 ஆம் கட்டம் – 4,722 சம்பவங்கள் (27.56%)

2 ஆம் கட்டம் – 12,326 சம்பவங்கள் (71.94%)

3 ஆம் கட்டம் – 58 சம்பவங்கள் (0.34%)

4 ஆம் கட்டம் – 24 சம்பவங்கள் (0.14%)

5 ஆம் கட்டம் – 4 சம்பங்கள் (0.2%)

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.