ஷா ஆலம், பிப் 6- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 10,081 ஆக உயர்வு கண்டது. நேற்று இந்த எண்ணிக்கை 9,117 ஆகப் பதிவாகியிருந்தது.நேற்றுடன் ஒப்பிடுகையில் 972 சம்பவங்கள் அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது.
இந்த புதிய தொற்றுடன் சேர்த்து நாட்டில் நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 14 ஆயிரத்து 220 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தனது டிவிட்டர் பதிவில் கூறினார்.
இன்று பதிவான 10,089 தொற்றுகளில் 10,012 அதாவது 99.24 விழுக்காடு ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் 77 தொற்றுகள் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான தகவல்களை https://covidnow.moh.gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
HEALTH
கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 10,089 ஆக உயர்வு
6 பிப்ரவரி 2022, 2:35 PM


